ஆளுநர் ரவிக்கு பேரிடி கொடுத்த உச்சநீதிமன்றம்!

மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்

Apr 8, 2025 - 17:47
 9
ஆளுநர் ரவிக்கு பேரிடி கொடுத்த உச்சநீதிமன்றம்!

ஆளுநர் ரவிக்கு பேரிடி கொடுத்த உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் திர்ப்பு அளித்துள்ளது.  

தமிழக அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்டப்பேரவை அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என ஆளுநர் முடிவெடுத்து விட்டால், அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியது தானே? அதை விடுத்து ஏன் சட்டப்பேரவைக்கு மீண்டும் அனுப்பி வைத்தார்? இந்த ஒரே கேள்வியை தான் 2 நாட்களாக விசாரணையில் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு ஆளுநர் பதிலளித்துவிட்டால் இந்த வழக்கில் அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்துவிடும்.

ஆளுநர் பதவி மிகவும் முக்கியமானது எனவே அவற்றின் செயல்பாடுகள் சரியானதாக இருக்க வேண்டும்.

குடியரசுத்தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டபடி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக உள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை.

ஆளுநருக்கென தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை, மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு ஒருமாதம் காலக்கெடு விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும் சில பிரிவுகளில் 3 மாதத்துக்குள்ளும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.

பொதுவான விதிகளின்படி ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.