போட்டியின்றி தேர்வாகும் நயினார் நாகேந்திரன்!
தலைவர் அறிவிப்பு விழா நடைபெறும்

போட்டியின்றி தேர்வாகும் நயினார் நாகேந்திரன்!
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி வந்ததும் விருப்ப மனு தாக்கல் துவங்கியது
அதிமுகவில் இருந்து நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் நயினார் நாகேந்திரன். இவர் பல சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டவர்.
எனவே நயினாருக்கு இருக்கும் அரசியல் அனுபவம் தேர்தலுக்கு மட்டுமல்லாமல் அதிமுகவுடனான பழைய கூட்ட உறவை புதுப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதன் அடிப்படையில் அடுத்த தலைவராக போட்டியின்றி நயினார் நாகேந்திரன் தான் தேர்வாவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இதனிடையே, கட்சியின் அறிவுரையின்படி தான் மாநில தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்தேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக பாஜக மாநில தலைபர் யார் எனும் அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் எனவும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தலைவர் அறிவிப்பு விழா நடைபெறும் எனவு தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.