ஓபிஎஸ் தனித்து விடப்பட மாட்டார்… மோடியின் கரங்களை செயல்படுத்துவதே எங்கள் குறிக்கோள்!

மோடியின் கரத்தை வலுப்படுத்த தேஜகூட்டணிக்கு சென்றவர்கள்

Apr 12, 2025 - 15:50
 3
ஓபிஎஸ் தனித்து விடப்பட மாட்டார்… மோடியின் கரங்களை செயல்படுத்துவதே எங்கள் குறிக்கோள்!

ஓபிஎஸ் தனித்து விடப்பட மாட்டார்… மோடியின் கரங்களை செயல்படுத்துவதே எங்கள் குறிக்கோள்!

இன்று (ஏப்ரல் 12) சென்னையில் அண்ணாமலையுடன் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நான் நேற்று மருத்துவமனைக்கு சென்றதையடுத்து ஊடகங்கள், தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டன. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆஞ்சியோ கிராம் செய்தால் இதய பிரச்சினை இருக்கும் என்ற அடிப்படையில் செய்திகள் வெளியிட்டீர்கள்.

ஆனால் அதெல்லாம் வரக் கூடாது என்று முன்னேச்சரிக்கையாக ஆஞ்சியோ செய்துகொண்டேன். இதயம் 100% நன்றாக இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன்என்று கூறிய டிடிவி தினகரன்

நான் பல முறை சொல்லியிருக்கிறேன். அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரண்டு, திமுக ஆட்சியை அகற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரிய சமுத்திரம். தமிழ்நாடு என்று வரும்போது அம்மாவின் கட்சி அதற்கு தலைமையேற்கும் என்று உள்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார்.நாங்கள் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எம்.ஜி.ஆர்,அம்மா வழியில் வந்தவர்கள். அதற்காக இந்தியாவின் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவும் தேஜகூட்டணியில் நாங்கள் இருக்கிறோம்.

2021 சட்டமன்றத் தேர்தலின் போதே அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் என்ன பேசினார் என்பதை ஓபிஎஸ் வெளிப்படையாக சொன்னார். 2026 இல் திமுகவை வீழ்த்த அமமுக உறுதியாக இருக்கிறது. நாங்கள் மோடியின் கரத்தை செயல்படுத்த தொடர்ந்து செயல்படுவோம்.

.பன்னீர்செல்வத்தை கைவிட்டுவிட்டார்கள், கால் விட்டுவிட்டார்கள் என்பதெல்லாம் சிலரது விருப்பம். ஆனால் .பன்னீர் செல்வமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்கிறார்.

அவர் தனிமைப்படுத்தப்பட மாட்டார். நாங்கள் எல்லாம் மோடியின் கரத்தை வலுப்படுத்த தேஜகூட்டணிக்கு சென்றவர்கள்என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.