சற்றுமுன்….. தொடங்கியது அனைத்துக் கட்சி கூட்டம்!
ஆபரேஷன் சிந்தூர் – அடுத்தகட்ட நடவடிக்கைகள்

சற்றுமுன்….. தொடங்கியது அனைத்துக் கட்சி கூட்டம்!
ஆபரேஷன் சிந்தூர் – அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.
இந்தியா நடத்திய தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அடியோடு தகர்க்கப்பட்டது.
இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தன.
தற்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம், அதற்கு மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.