உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட்-என்ன காரணம்? MICROSOFT ERROR..!
உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட்-என்ன காரணம்? MICROSOFT ERROR..!
உலகெங்கிலும் உள்ள பயனாளர்கள் தங்கள் கணினி, மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், உலகில் உள்ள பெரும்பாலான Microsoft பயனர்களுக்கு , சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேரான Crowdstrike அப்டேட் காரணமாகவே பலரின் கணினிகள் திடீரென முடங்கி BSOD என்னும் ப்ளூ ஸ்க்ரீன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஸ்கீரின் முழுவதும் நீல நிறத்தில் மாறி, எரர் மெசேஜ் வந்துள்ளது. விரைவில் இதனை சரி செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனிப்பட்ட கணினிகள் மட்டுமின்றி உலகெங்கும் பலரும் மைக்ரோசாப்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால் மீடியா, ஏர்போர்ட், வங்கி சேவை , மருத்துவமனை என அனைத்து சர்வர்களிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.