மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்!

தலைகுனியும் சூழல் ஏற்பட்டது

Apr 12, 2025 - 17:13
 4
மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்!

சர்ச்சைக்குரிய பேச்சுக்காக மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி.

தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன்.

நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இது போல தடுமாற்றம் ஏற்பட்டதை நினைத்து வருத்தமாக உள்ளது.

பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

சைவம் வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார் பொன்முடி.

பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து குற்றச்சாட்டுக்களும் புகார்களும் எழுந்து வந்தது.

இதனையடுத்து, அவர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பானது, முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலினின் பக்கத்திலிருந்தே வெளியாகி இருந்த நிலையில் பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார்.