லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம்!
ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்

லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம்!
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான லக்னோ அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன மிட்செல் மார்ஷ் இடம்பெறவில்லை. நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இன்றைய போட்டியில் ஆடாதது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மிட்செல் மார்ஷ் இடம்பெறாததற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ள லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மிட்செல் மார்ஷ் இந்த போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.