சாட்டை கருத்துக்கு கட்சி பொறுப்பேற்காது…. சீமான் வெளியிட்ட அறிக்கையால் சலசலப்பு!

நாம் தமிழர் பொறுப்பேற்காது

Apr 16, 2025 - 14:41
 6
சாட்டை கருத்துக்கு கட்சி பொறுப்பேற்காது…. சீமான் வெளியிட்ட அறிக்கையால் சலசலப்பு!

சாட்டை கருத்துக்கு கட்சி பொறுப்பேற்காது…. சீமான் வெளியிட்ட அறிக்கையால் சலசலப்பு!

சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலில் இடம்பெறும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் சாட்டை துரைமுகனின் தனிப்பட்ட கருத்து.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியீட்டுள்ளார்.  

அந்த அறிக்கையில், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளராக இருக்கக் கூடிய துரைமுருகன் நடத்தி வருகிறார்.

அதில் அரசியல் ரீதியாகவும், திரைப்பட விமர்சனம் ரீதியாகவும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் துரைமுருகன்.

அண்மையில் நித்யானந்தாவின் கைலாசா குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் அதற்கு நித்யானந்தாவும் பதிலளித்திருந்தார்.

நித்தியானந்தா பதிலளித்த வீடியோவையும் சாட்டை யூடியூப் சேனலில் பதிவேற்றியிருந்தார் துரைமுருகன்.

குறிப்பாக, தொடர்ந்து அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் துரைமுருகன். 

இந்த நிலையில் துரைமுருகன் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பேற்காது என சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.