தினசரி 1 கேரட் சாப்பிட்டாலே போதும்…சருமம், முடி, பல் பிரச்சனைக்கு நிறந்தர தீர்வு!

Apr 18, 2025 - 16:25
 7
தினசரி 1 கேரட் சாப்பிட்டாலே போதும்…சருமம், முடி, பல் பிரச்சனைக்கு நிறந்தர தீர்வு!

தினசரி 1 கேரட் சாப்பிட்டாலே போதும்…சருமம், முடி, பல் பிரச்சனைக்கு நிறந்தர தீர்வு!

கேரட்டில் நமது உடலுக்கு தேவையான பீட்டா கரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸ்டெட்ண்ட் பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளன. 

கேரட்டில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதில் இயற்கையாகவே கொழுப்பு மற்றும் கலோரிகள் போன்றவை நிறைந்துள்ளன.

கேரட் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இது விட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களின் ஒரு சிறந்த மூலமாகும்.

இது கண் பார்வைக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. சருமத்திற்கு பொலிவை அளிக்கிறது.

தலை முடி பிரச்சனைக்கு சிறந்த உணவு கேரட்:

அதிகமாக முடி கொட்டுவது, பொடுகு பிரச்சனை போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கேரட்டில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் தலையில் வறட்சி ஏற்படாமல் தடுத்து பொடுகு போன்ற பாதிப்புகளை தடுக்கிறது. 

தினசரி கேரட்டை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் முகப்பரு, அரிப்பு, தோல் அழற்சி, வறட்சியான சருமம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்வதற்கு கேரட் ஒரு சிறந்த உணவாக உள்ளது.

சூரிய ஒளியால் ஏற்படும் கருமை நிறத்தை போக்குவதற்கும் கேரட் உதவுகிறது.

பல் ஆரோக்கியத்திற்கு கேரட் அவசியமான ஒன்று:

கேரட்டை அப்படியே சாப்பிடுவதால் பல் ஆரோக்கியம் மேம்படுகிறது. பற்களில் உள்ள உணவு துகள்களை அகற்றி வாய்வழி சுத்தத்தை பராமரிக்கவும், உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.

குறிப்பாக, பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதற்கு கேரட் சிறந்த தீர்வாக உள்ளது.

சாலட் வடிவில் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நமது உடலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் குறப்பதற்கு கேரட் உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கேரட்டில் உள்ள பண்புகள் உதவுகின்றன. இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் சீரான இயக்கத்தை செயல்படுத்தக்கூடிய பண்புகள் கேரட்டில் உள்ளன. நமது இரத்த ஓட்டம் சீராவதற்கும் உடல் முழுவதும் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கும் கேரட்டில் உள்ள பல்வேறு நன்மைகள் உதவுகின்றன.