அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா உறுதி?

ராஜினாமா கிட்டத்தட்ட உறுதி

Apr 26, 2025 - 13:59
 4
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா உறுதி?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா உறுதி?

செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவரது மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார்.

உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும் மசோதா.

செந்தில் பாலாஜி மசோதாவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு திங்கள் கிழமை வரை உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

அமைச்சர் பதவியா? ஜாமீனா? என செந்தில்பாலாஜி திங்கள் கிழமை பிற்பகல் 2 மணிக்கு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா பேரவை கூட்டத்தின் இறுதி நாளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அமைச்சர் பதவியிலிருந்து விலக கூடிய நிபந்தனை இருக்கிறது.

இந்த நேரத்தில் செந்தில் பாலாஜி மசோதாவை தாக்கல் செய்தால் விவாதத்தின் போது அவரால் பதிலளிக்க முடியாது என்னும் காரணத்தினால் அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைவைத்து செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி ராஜினாமா என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.