பிரதமர் மோடியை சந்தித்து முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர்! MK Stalin meets PM Modi
பிரதமர் மோடியை சந்தித்து முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர்! MK Stalin meets PM Modi
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு நலன் சார்ந்த 3 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
முதலமைச்சரின் மூன்று முக்கிய கோரிக்கைகள்!
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு தொகையை வழங்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறையில் சமக்ர சிக்க்ஷா திட்டத்திற்காக வழங்கப்பட வேண்டிய நிதியினை விரைந்து வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து, இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மூன்று முக்கியமான கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன் வைத்துள்ளார்.