தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்கு திருட்டு புகார் குறித்து விளக்கம்
அரசியல் அமைப்பையே அவமதிக்கிறீங்க…

வாக்கு திருட்டு புகார் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்
வாக்கு திருட்டு போன்ற சொற்களைப் பயன்படுத்துவது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் நடத்தி வருகிறது. வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறுகிறது 1.6 லட்சம் பூத் லெவல் ஏஜெண்டுகள் வரைவுப் பட்டியலைத் தயாரித்துள்ளனர்.
அதே போல ஒவ்வொரு பூத்திலும் இந்த வரைவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் பூத் லெவல் ஏஜெண்டுகளும் தங்கள் கையொப்பங்களுடன் அதைச் சரிபார்த்தனர்.
ஏற்கனவே, பீகாரில் சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக 3 தேர்தல் ஆணையர்கள் ஆலோசித்து முடிவெடுப்பர் என விளக்கம் அளித்துள்ளார்.