Space X ஸ்டார்ஷிப் வெற்றியும், அதிர்ச்சியூட்டும் சூப்பர் ஹெவி பூஸ்டர் சாதனையும் | Elon Musk
Space X ஸ்டார்ஷிப் வெற்றியும், அதிர்ச்சியூட்டும் சூப்பர் ஹெவி பூஸ்டர் சாதனையும் | Elon Musk
அண்மையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வில் பெரிய சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகோசிகா ஏவுதளத்தில் இருந்து, 400 அடி உயரம் கொண்ட ஐந்தாவது ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இதற்கு உறுதுணையாக இருந்தது சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்.
வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ராக்கெட
விண்வெளிக்குள் ஏவப்பட்டு 7 நிமிடங்களுக்குள், 5000 மெட்ரிக் டன் எடையுடைய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி மீண்டும் ஏவுதளத்திற்கே திரும்பியது. இதற்கு முன்பு ஏவப்பட்ட ராக்கெட்டுகள் திரும்பி வராமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை, மிக துல்லியமாக புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து ராக்கெட் பூமியில் இறங்கியது.
'சாப்ஸ்டிக்ஸ்' உதவியால் ராக்கெட்டை பிடித்த மெக்காஸில்லா
மீண்டும் பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை, "மெக்காஸில்லா" எனப்படும் மிகப்பெரிய லான்ச்பேட்டில் உள்ள 'சாப்ஸ்டிக்ஸ்' எனப்படும் இடத்திற்கு வந்தடைந்தது. இதை பார்த்த மக்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களும் ஆச்சரியமடைந்தனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட, அது உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், எலான் மஸ்க் X தளத்தில் "டவர் ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டரை பிடித்துவிட்டது!" என்று உற்சாகமாக பகிர்ந்தார்.
இந்த சாதனை பல விஞ்ஞானிகளால் மற்றும் ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.