அனில் அம்பானிக்கு தொடர்புடைய 8 இடங்களில் சிபிஐ சோதனை!

அனில் அம்பானி திவாலானவர்

Aug 23, 2025 - 18:08
 2
அனில் அம்பானிக்கு தொடர்புடைய 8 இடங்களில் சிபிஐ சோதனை!

அனில் அம்பானிக்கு தொடர்புடைய 8 இடங்களில் சிபிஐ சோதனை!   

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

அனில் அம்பானி சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக எஸ்.பி.ஐ குற்றச்சாட்டு வைத்துள்ளது.  

சமீபத்தில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

ஏற்கனவே, அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்த நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணக்கும் அனில் அம்பானி ஆஜராகினார்.

இதனையடுத்து, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அனில் அம்பானி மீது வழக்குப்பதிவு செய்தது.

தற்போது, மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் அனில் அம்பானி தொடர்புடைய 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  

சிபிஐ நடத்தும் இந்த சோதனையில். வங்கி நிதி எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் கடன்கள் திருப்பி விடப்பட்டதா என்பதை கண்டுபிடிப்பதற்கு முக்கியமான ஆவணங்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து, டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிப்பதே இன்றைய சோதனையில் நோக்கமாக இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.