CM CHAIR-ல் EPS அமர்வது உறுதி… அடித்து சொன்ன அண்ணாமலை!

மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்க மாட்டார்கள்

Aug 26, 2025 - 13:07
 2
CM CHAIR-ல் EPS அமர்வது உறுதி… அடித்து சொன்ன அண்ணாமலை!

CM CHAIR-ல் EPS அமர்வது உறுதி… அடித்து சொன்ன அண்ணாமலை!

அதிமுக தொண்டர்கள் பாஜகவை மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்க மாட்டார்கள் என அண்ணாமலை உறுதியாக பேசியுள்ளார்.

அதிமுகவினர் எப்படி பாஜகவிற்காக உழைக்கிறார்களோ அதே போல் பாஜகவினருக்காக அதிமுகவினர் உழைப்பார்கள் அதுதான் அண்ணன், தம்பி உறவு.

பாஜகவின் டெல்லி தலைமை முடிவு எடுத்துவிட்டது அதற்கேற்றார் போல் ஒரே இலக்கில் தான் செயல்பட போகிறோம்.

ஒரு அணியில் திரண்டு நிற்பது தான் எங்கள் இலக்கு அதிமுக, பாஜக ஒன்றாக செயல்படும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  

தலைமையின் அறிவுரையை ஏற்று உயிரைக் கொடுத்து உழைக்க போகிறோம் அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

நாங்கள் உழைப்பது போல் அதிமுகவினரும் எங்களுக்காக உழைப்பார்கள் அதில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

எல்லாரும் சேர்ந்து உழைத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பது உறுதி என அண்ணாமலை பேசியுள்ளார்.