முதல்முறையாக போர்க்காட்சிகளை உலகிற்கு காட்டிய சீனா!

மெய்சிலிர்க்க வைத்த சீனாவின் போர் காட்சிகள்

Sep 3, 2025 - 16:32
 42
முதல்முறையாக போர்க்காட்சிகளை உலகிற்கு காட்டிய சீனா!

முதல்முறையாக போர்க்காட்சிகளை உலகிற்கு காட்டிய சீனா! 

பொருளாதார ரீதியாக அமெரிக்கா நெருக்கடி கொடுக்கும் சூழலில் முதல் முறையாக சீனா தனது போர் ஆயுதங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதன் 80வது ஆண்டு விழா சீனாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  

தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் துவக்கத்தில் நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டது.     

சீன தலைநகர் கொண்டாட்டத்தில் மூப்படை வீரர்களின் அணிவகுப்பு கம்பீரமாக நடைபெற்றது.

சீன கொண்டாட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய அதிபர் கிம் இந்தோனேசிய அதிபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த அணிவகுப்பில் அதிநவீன ராணுவ தளவாடங்கள் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், விமானப்படையினரின் கண்கவர் சாகசங்கள் பார்ப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.