மத்திய அரசின் எந்த திட்டத்தையும் வரவேற்பதில்லை…. முதல்வரால் பதில் சொல்ல முடியுமா?
மக்கள் விரோத திட்டம் என்ன என்பதை சொல்ல வேண்டும்

மத்திய அரசின் எந்த திட்டத்தையும் வரவேற்பதில்லை…. முதல்வரால் பதில் சொல்ல முடியுமா?
மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பதில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய அரசின் மக்கள் விரோத திட்டம் என்ன என்பதை சொல்ல வேண்டும் எனவும், மக்களுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக பொருட்களை கொடுப்பது மத்திய அரசு தான் என நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
ஜிஎஸ்டியில் மத்திய அரசின் நேரடி வரிவிதிப்பு என்று எதுவுமே கிடையாது. எல்லா மாநில நிதியமைச்சர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஒப்புதலோடு தான் இதுவரை இந்தியாவில் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தை பொறுத்த வரை திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரையில் எந்த மத்திய அரசின் திட்டங்களையும் கொண்டு வரவில்லை என கூறிய அவர், ஜிஎஸ்டியில் எல்லாவற்றையும் விலை குறைத்தும், ஆவினில் விலையை குறைக்கவில்லை… போராட்டம் அறிவித்த பின்னரே விலையை குறைத்தார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.