பிரச்சாரத்திற்கு நிபந்தனை விதித்த காவல்துறை!

விஜய் ரோடு ஷோ செல்லக் கூடாது

Sep 10, 2025 - 14:28
 3
பிரச்சாரத்திற்கு நிபந்தனை விதித்த காவல்துறை!

பிரச்சாரத்திற்கு நிபந்தனை விதித்த காவல்துறை!

விஜய் சுற்றுப்பயணத்திற்காக காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

திருச்சியில் வரும் சனிக்கிழமை நடைபெறும் பிரச்சாரத்தில் விஜய் 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் வரும் 13 முதல் 20ம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் தான் காவல்துறை விஜய்யின் பிரச்சாரத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.   

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வரக்கூடாது.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தக் கூடாது.

பிரச்சாரம் செய்யும் விஜய் ரோடு ஷோ செல்லக் கூடாது, வாகனத்தில் அமர்ந்தபடியே வரவேண்டும்.

விஜய் பிரச்சாரம் செய்யும் போது விஜய்யின் பின்னால் ஐந்து அல்லது ஆறு வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து செல்ல வேண்டும்.

பிரச்சாரம் முடிந்த பின்னர் டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து மரக்கடை வந்து திருவெறும்பூர் நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.