திருச்சி தான் முக்கிய திருப்புமுனை…. ஆரவாரத்திற்கு மத்தியில் விஜய் பிரச்சாரம்

வாக்குறுதிகளை பட்டியலிட்டு கேள்வி

Sep 13, 2025 - 17:41
 11
திருச்சி தான் முக்கிய திருப்புமுனை…. ஆரவாரத்திற்கு மத்தியில் விஜய் பிரச்சாரம்

திருச்சி தான் முக்கிய திருப்புமுனை…. ஆரவாரத்திற்கு மத்தியில் விஜய் பிரச்சாரம்

திமுக எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி மரக்கடையில் தனது முதல் பிரச்சாரத்தை இன்று தொடங்கி தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார் விஜய்.

தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பேசும் விஜய், திமுக வாக்குறுதிகளை பட்டியலிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

505 வாக்குறுதி அளித்தீர்களே எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள்.

பஸ்ஸில் இலவச டிக்கெட் கொடுத்துவிட்டு, ஓசில போறீங்கனு அசிங்கப்படுத்துறீங்கஅதற்கு நீங்கள் செய்யாமலே இருக்கலாமே?

திருச்சி என்பது பல்வேறு வரலாறுகளுக்கு திருப்புமுனை முக்கிய நிகழ்வுகள் தொடங்கியது திருச்சியில் தான்.

ஒரு சில மண்ணைத் தொட்டால் ரொம்ப நல்லது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதேபோன்று திருச்சியில் துவங்கிய எல்லாமே திருப்புமுனை என்று சொல்வார்கள்.

அதேபோன்று திருச்சியில் துவங்கிய எல்லாமே திருப்புமுனை என்று சொல்வார்கள். அறிஞர் அண்ணா முதன்முறையாக தேர்தலில் நிற்க வேண்டும் என நினைத்தது திருச்சியில் தான். எம்.ஜி.ஆர் அவரது முதல் மாநில மாநாட்டை நடத்தியது திருச்சியில் தான்.

பெரியார் அவர்கள் வாழ்ந்த இடம். மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற இடம். திருச்சி வந்து உங்களையெல்லாம் பார்த்ததும் எனக்குள் ஒரு பரவசம் ஏற்பட்டுள்ளதுஎன திருச்சியையும், திருச்சி மக்களை பற்றிய தனது எண்ணங்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.