ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அரசு ஒப்புதல்! One Nation One Election

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்...

Dec 12, 2024 - 16:12
Dec 12, 2024 - 16:23
 4
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அரசு ஒப்புதல்! One Nation One Election

 ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அரசு ஒப்புதல்.....மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்! One Nation One Election

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் டிச., 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனிடையே, இன்று (டிச.,12) டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த வாரம் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனவும், விரைவில் இந்த மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.

எதிர்க்கட்சியினர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக கூறி வந்த நிலையில் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.