USA வரி & H-1B எந்தப் பாதிப்பும் இல்லை : இதை நம்பி நாங்கள் இல்லை - "ஸ்ரீதர் வேம்பு" அசத்தல் பதில்கள்...! Sridhar Vembu

Sep 23, 2025 - 17:00
 50
USA வரி & H-1B எந்தப் பாதிப்பும் இல்லை : இதை நம்பி நாங்கள் இல்லை - "ஸ்ரீதர் வேம்பு" அசத்தல் பதில்கள்...! Sridhar Vembu

USA வரி & H-1B எந்தப் பாதிப்பும் இல்லை : இதை நம்பி நாங்கள் இல்லை - "ஸ்ரீதர் வேம்பு" அசத்தல் பதில்கள்...! Sridhar Vembu

இந்தியாவின் இன்ஸ்பிரேஷன் தமிழ்நாட்டின் மிகவும் அறியப்பட்ட சிறந்த மனிதராக இருக்கக்கூடிய (Zoho) ஜோஹோ-வின் இயக்குநர்... இன்றைக்கும் ஒரு ட்ரெண்டிங்கில் உள்ள மனிதராக, இளைஞர்கள் பலருக்கு பெரும் ஊக்கசக்தியாக இருக்கக்கூடியவர் திரு ஸ்ரீதர் வேம்பு அவர்கள். ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபர் திரு ஸ்ரீதர் வேம்புவைப் பார்த்து, "உங்களுடைய நேரத்தை எப்படி நிர்வகிக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீதர் அவர்கள், "எனக்கு இப்பொழுது நேரத்தை நிர்வகிப்பதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது. நிறைய தொழில்நுட்ப வேலைகள் செய்துகொண்டிருக்கிறோம். நான் ஆர் அண்ட் டி-யில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறேன்."

இன்று நமது நாட்டிற்குத் தேவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு. எல்லாப் பொருட்களையும் எல்லாத் தொழில்நுட்பங்களையும் நாம் இங்கேயே கொண்டு வர வேண்டும். இப்பொழுது இருக்கிற உலக சூழ்நிலையைப் பார்த்தால் நன்றாகவே தெரிகிறது. இன்றைய சூழ்நிலைக்கு நம் நாட்டிற்கு மிகவும் தேவை சுயசார்பு பொருளாதாரம். அமெரிக்கா வரி என்கிறார்கள் ஹெச் ஒன் என்கிறார்கள் இதையெல்லாம் குறை சொல்லி நமக்கு ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அவர்கள் நாடு அவர்கள் இஷ்டம். அவர்கள் எதையோ செய்கிறார்கள். நமது நாட்டில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் விஷயம். அதற்கு நம் நாட்டிற்குத் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது. நான் நம் நாட்டு இளைஞர்களுக்கு என்ன ஊக்கம் கொடுக்க விரும்புகிறேன் என்றால், கற்றுக் கொள்வதை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள். எதைக் கற்றுக் கொண்டாலும் அதை முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொள்ளும் பட்சத்தில் நல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

நமக்கு இருக்கும் தடைகள் என்னவென்றால் நம்முடைய மனம் நமக்கு ஒரு சின்ன விஷயத்தைக்கூட மிக நுணுக்கமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் எந்த ஒரு சின்ன விஷயத்தையும் பார்த்தாலும் அதை எப்படிச் செய்திருப்பார்கள், அது எப்படிச் செய்ய வேண்டும் என்று, இதை எப்படி உருவாக்க முடியும் என்ற மாதிரியான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தோம் என்றால் கண்டிப்பாக நாம் அதைச் செய்ய முடியும். எல்லோரும் சீனாவை ஒப்பிடுகிறார்கள். இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் வேலையாட்களின் சம்பளம் இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகம். நிலத்தின் விலை அதிகம், மின்சார விலை அதிகம். நம் இந்தியர்களால் சீனாவுடன் கண்டிப்பாகப் போட்டி போட முடியும் என்கின்ற நம்பிக்கை வேண்டும். நான் என்ன சொல்லுவேன் என்றால் முதலில் இயந்திரக் கருவிகளை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். ஏன் என்றால் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் செய்தால் கூட இதற்கு என்ன இயந்திரங்கள் வேண்டுமோ அதை கண்டிப்பாக நாம் இறக்குமதி செய்து ஆக வேண்டும். இதற்கு அடுத்தது அந்த இயந்திரத்தை எப்படிச் செய்யலாம் என்பது இதற்கு அடுத்த விஷயம்.

முதலில் அதை நாம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏணிப்படி மாதிரிதான் படிப்படியாக உயரலாம். அமெரிக்காவின் ஹெச் ஒன் பி பற்றி கேள்விக்குப் பதில் அளித்து திரு ஸ்ரீதர் வேம்பு அவர்கள், "ஹெச் ஒன் பி-யால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதை நான் ஒரு லாங் டேர்மாகப் பார்க்கிறேன். இன்னும் பத்து வருடங்களில் இது இந்தியாவிற்கு நன்மையைத்தான் அளிக்கும். ஏனென்றால் நம்முடைய டேலண்ட்டை நாம் தக்க வைத்துக் கொள்கிறோம். அதே மாதிரி அமெரிக்காவிற்குப் போயிருப்பவர்களும் நம் தேசத்திற்கு எப்படித் திரும்ப வருவது என்று யோசிப்பது நல்லது. ஏன் அப்படி என்றால், அலையாத வீட்டில் நாம் ஏன் விருந்தாளியாக இருக்க வேண்டும்?

அமெரிக்காவில் வேண்டாம் என்று சொல்கிறார்கள். நாம் திரும்பி நம் தாயகத்திற்கு வருவது மிகவும் நல்லது. அப்படித்தான் நான் சொல்லுவேன்" என்றார். இன்றைக்கு சாஃப்ட்வேரை மட்டும் நம்பி இருக்க முடியாது. பல தொழில்களும் தேவை. மெடிக்கல் எக்யூப்மென்ட் தேவை. ட்ரோன் தேவை. ராக்கெட் தேவை. ஜெட் இன்ஜின் தேவை. ஃபைட்டர் ஜெட் தேவை. மெட்டல் எனர்ஜி தேவை. இந்த மாதிரி பல தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன. சாஃப்ட்வேர் மட்டுமே நம்பி இருப்பது கான்சன்ட்ரேஷனுக்கு நல்லது இல்லை. அமெரிக்காவின் வரி விதிப்பால் சோகோ நிறுவனத்திற்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த திரு ஸ்ரீதர் வேம்பு அவர்கள் இதுவரைக்கும் ஒன்றும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ஆனால் நாங்கள் அதை மட்டுமே நம்பி இல்லை என்றும் பதில் அளித்தார்.