2,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை… மத்திய அரசு பாராட்டு!

ராஜ்நாத் சிங் பெருமிதம்

Sep 26, 2025 - 17:36
Sep 26, 2025 - 17:38
 36
2,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை… மத்திய அரசு பாராட்டு!

2,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை… மத்திய அரசு பாராட்டு! 

ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவும் சோதனையை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

2,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அதிநவீன ராணுவ தளவாடங்களை டி.ஆர்.டி. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது.

அந்த வகையில் டி.ஆர்.டி. உருவாக்கிய அதிநவீன அடுத்த தலைமுறை அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன.
அடுத்த கட்ட முயற்சியாக 2,000 கி.மீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் நடுத்தர வகை அக்னி பிரைம் ஏவுகணையை டி.ஆர்.டி. உருவாக்கி உள்ளது. 
பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலில் இருந்து ஏவும் சோதனை நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது.

அக்னி பிரைம் ஏவுகணையை உருவாக்கிய டி.ஆர்.டி. விஞ்ஞானிகளை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

இது குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் இந்த ஏவுகணையை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

குறுகிய காலத்திற்குள் எந்த இடத்தில் இருந்தும் ஏவுகணையை செலுத்தி எதிரிகளின் இலக்கை துல்லியமாக அழிக்க முடியும்.

இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி. விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன்.

இதன் மூலம், ரயிலில் இருந்தபடி ஏவுகணை ஏவும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என பேசியுள்ளார்.