திடீரென வீடு மாறிய விஜய் – போலீசார் பலத்த பாதுகாப்பு
விரைவில் விஜய் கரூர் செல்வார்

திடீரென வீடு மாறிய விஜய் – போலீசார் பலத்த பாதுகாப்பு
விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நடிகர் விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கும் தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
41 பேரை பலிகொண்ட பெருந்துயரத்தை அடுத்து 34 மணி நேரம் கழித்து விஜய் வெளியே வந்துள்ளார்.
இந்த சம்வவம் குறித்து தவெக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையம், சென்னை விமான நிலையம் என எங்கும் செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
சனிக்கிழமை இரவு நீலாங்கரை இல்லத்திற்கு சென்ற விஜய் இன்று காலை தான் அங்கிருந்து பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு புறப்பட்டுள்ளார்.
விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு வெடி குண்டு மிரட்டலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர், இடம் மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, விரைவில் விஜய் கரூர் செல்வார் என்றும் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு இழப்பீடுகளை வழங்குவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து, கரூரில் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் மற்றும் நிதி உதவிகளை அளித்து வருகின்றனர்.
அதே போல், ஒரு நபர் ஆணையம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை விஜய் இது பற்றி எந்த கருத்தும் கூறாமல் இருப்பது பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.