அடித்து சொன்ன அண்ணாமலை… இதுதான் காரணம்; இவ்வளவு சரியா சொல்லிட்டாரே!

தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது

Sep 29, 2025 - 17:38
 48
அடித்து சொன்ன அண்ணாமலை… இதுதான் காரணம்; இவ்வளவு சரியா சொல்லிட்டாரே!

அடித்து சொன்ன அண்ணாமலை… இதுதான் காரணம்; இவ்வளவு சரியா சொல்லிட்டாரே!

அரசுக்கு மக்கள் தானே முக்கியம் என கடுமையான பேசியுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலையின் பேச்சு தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இறந்த போன உயிர்கள் திரும்ப வரப்போவது இல்லை அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவியும், காயப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய உள்ளோம்.  

சரியான இடத்தை கொடுக்க வேண்டியது ஒரு அரசினுடைய கடமை ஒரு சந்தில் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது சாத்தியமில்லாத ஒன்று.  

இவ்வளவு கூட்டம் உள்ள இடத்தில் முக குறைந்த காவல்துறை அதிகாரிகளையே நியமித்துள்ளனர்.  

மாவட்டத்தினுடைய ஆட்சி தலைவர், மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்.  

அரசியல்வாதிகள் ஆயிரம் சொல்வார்கள் அதையெல்லாம் கேட்பதற்காகவா சீருடை அணிந்த காவல்துறை இருக்கிறது.

ஒரு தலைவனை பார்க்க வரும் தொண்டன் செருப்பை வீச மாட்டான், மின்சாரம் எப்படி துண்டிக்கப்படும்?

வீக் எண்ட் கான்சப்ட்டிலிருந்து விஜய் வெளியே வர வேண்டும்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி அல்ல மக்கள் தானே அரசுக்கு முக்கியம் அதை தானே கவனத்தில் கொள்ள வேண்டும்.  

500 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருந்ததாக சொல்கின்றனர் ஆனால், 100 அதிகாரிகள் கூட அங்கு இல்லை என காட்டமாக பேசியுள்ளார்.