உணவு முறைகளால் முகத்தின் நிறத்தை மாற்ற முடியும்…..என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?
அதிகமாக தண்ணீர் குடிப்பதால் சரும பொலிவு ஏற்படும்
உணவு முறைகளால் முகத்தின் நிறத்தை மாற்ற முடியும்…..
என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற இரசாயனம் இல்லாத இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது.
சருமத்தை முறையாக பராமரிப்பது நம்மை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதிக முகப்பரு அல்லது சருமம் அதிகமாக வியர்க்கும் நேரங்களில் முகத்தை ஸ்க்ரப் செய்யக்கூடாது. மற்ற சமயங்களில் அவ்வப்போது சருமத்தை இயற்கையான பொருள்கள் கொண்ட ஸ்கிரப்பை பயன்படுத்தி ஸ்கிரப் செய்து கொள்ளலாம்.
பருக்கள் போன்றவை இருக்கும் சமயங்களில் தேய்த்துக் குளிப்பது, ஸ்கிரப் செய்வது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகமாக அழுத்தித் தேய்ப்பதால் முகப்பருக்கள் உடைந்து சருமத்தை மேலும் மோசமடையச் செய்துவிடும்.
தூங்கி எழுந்த பின்பும், தூங்கச் செல்வதற்கு முன்பும் முகத்தை நன்றாக கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தூங்கும் போது நம்முடைய முகத்தில் படியும் பாக்டீரியாக்களை நீக்குவதற்கு முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.
குறிப்பாக தூங்கச் செல்வதற்கு முன் முகத்திலுள்ள மேக்கப்பை முழுவதுமாக நீக்கி க்ளன்ஸ் செய்வது மிக அவசியம்.
முகம் கழுவும்போது சிலர் அழுக்குகளை நீக்குகிறேன் என்று சொல்லி, சோப்பு போட்டு, அழுத்தி தேய்ப்பது, நகங்களால் சொரிந்து தேய்ப்பது போன்றவற்றை செய்வார்கள். அது மிகப்பெரிய தவறு.
நம்முடைய சருமத்தை மென்மையாகக் கையாளுவது நமது அழகை மேலும் மெருகூட்ட உதவும்.
உணவுப்பொருட்களால் சருமத்தை எளிதாக மாற்றலாம் ;
நம்முடைய சருமத்துக்கு ஈரப்பதமாகவும், இயற்கையான பளபளப்பைச் சேர்ப்பதற்கும் உணவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன், சிப்பிகள், மத்தி, வால்நட்ஸ், சியா விதைகள் மற்றும் வேர்க்கடலை போன்ற உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
அவகேடோ மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் உணவில் சேர்ப்பதோடு சருமத்தில் அப்ளை செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
பழங்கள், காய்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இயற்கையாகவே சரும பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
அதிகமாக தண்ணீர் குடிப்பதால் சரும பொலிவு ஏற்படும்.
விட்டமின் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவரை அனுக வேண்டும்:
உங்கள் சருமத்தில் ஏதேனும் வித்தியாசமான அறிகுறிகளை கண்டறிந்தால், சரியான சரும மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
ஏதாவது யூகத்தின் அடிப்படையில் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சரும நிபுணரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது. அவர்கள் நம்முடைய சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பார்கள்.