இனிமேல் ஹோட்டல்கள் இப்படி இருந்தா கடும் நடவடிக்கை பாயும்!
உணவக உரிமையாளருக்கு அபராதம்
இனிமேல் ஹோட்டல்கள் இப்படி இருந்தா கடும் நடவடிக்கை பாயும்!
ஹோட்டல்களில் உள்ள கழிவறை மற்றும் கை கழுவும் இடங்கள் அசுத்தமாக இருந்தால் உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உணவகங்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்று ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரியாணி, சிக்கன் 65 உள்ளிட்ட உணவுப் பொருட்களில் செயற்கை நிறமூட்டிகளை சேர்க்கக் கூடாது எனவும், உணவு பாதுகாப்பு துறையின் விதிகளின்படி உணவு பொருட்களை சமைக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு நோய் தொற்று பாதிப்போ அல்லது காய்ச்சல் உள்ளவர்களையோ பணியில் அமர்த்தக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை விதித்துள்ளது.
மேலும், உணவகங்கள் அசுத்தமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பணியாளர்கள் கையுறை, தலைக்கு உரை அணிந்து உணவுகளை தயாரிக்கவும் பரிமாறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
