முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
வன்முறை வெடித்த வழக்கில் தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு.
கடந்த ஆண்டு மாணவர்கள் கிளர்ச்சியின்போது வன்முறை வெடித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
மனித உரிமை குற்றங்களில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவரது உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் குற்றவாளிகள் என அறிவிப்பு.
மனித குளத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா ஈடுபட்டுள்ளதாக அறிவிப்பு. மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
