ஆசிரியா்களை கொண்டாடும் ஜப்பான் !

Oct 23, 2024 - 18:09
Oct 24, 2024 - 17:19
 20
ஆசிரியா்களை கொண்டாடும் ஜப்பான் !

ஆசிரியா்களை கொண்டாடும் ஜப்பான் !

"MADE IN JAPAN"... என்ற இந்த ஒரு வாா்த்தை உலகளவில் மிகவும் பிரபலம் , சுறுசுறுப்பும் கடும் உழைப்பும் ஜப்பானியா்களின் அடையாலம் . ஜப்பான் மக்களின் நாகரிகம், மற்றும் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் அந்நாட்டு மக்களின் உயா்வுக்கு பின்னால் இருப்பது ஆசிரியர்கள் தான் என்றும் சொல்லும் அளவுக்கு ஜப்பானில் ஆசிரியா்களுக்கு மிகுந்த மரியாதையும் மிக உயரிய நிலையில் ஆசிரியா்களை போற்றி வருகிறது ஜப்பான் நாடு.

ஆசிரியர்களுக்கு வழங்கும் மரியாதை & சலுகைகள்

ஜப்பானில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச மரியாதை மற்றும் சலுகைகள்... நம்முடன் பயணிப்பவா் ஆசிரியர்கள் என்று  தெரிந்தால் வயதானவர்கள் உட்பட பலர், ஆசிரியர்களுக்கு தங்கள் இருக்கைகளை வழங்குகிவிடுவாா்கள்.
 
இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு என்று எப்படி தனியாக கேண்டீன் இருக்கிறதோ அதுபோல் ஜப்பானில் ஆசிரியர்களுக்குகென்றே  தனித்துவமான பல சலுகைகள் கொண்ட கடைகள் உள்ளன. அந்த கடைகளில், ஆசிரியர்கள் மட்டும் பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
 
மேலும், ஜப்பானில் ஆசிரியர்களுக்காக பல உயரிய சலுகைகள், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் வழங்கப்படுகின்றன. ஜப்பானில், ஆசிரியர் என்பவர் கடவுளுக்கு நிகராக கருதப்படுகிறார், கோடீஸ்வரர்கள் தொழிலதிபர்கள் என்று அனைவரும் ஆசிரியர்களுடன்  உறவாடுவதைக் பெருமையாகக் கருதுகிறார்கள்.

ஜப்பானில் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்துகளில் கூட, ஆசிரியர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட இருக்கைகள் உள்ளன. அதேபோல், அவர்கள் எந்த வகையான போக்குவரத்திற்கும் டிக்கெட் வாங்க, வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களுக்குச் செலுத்தப்படும் மிகுந்த மரியாதையின் சின்னமாகவே காணப்படுகிறது.

ஆசிரியர் தினத்தை கொண்டாடாத ஜப்பான் ?

ஜப்பானில் அதிகாரப்பூர்வமாக  ஆசிரியர் தினம் என்று ஒன்று, கொண்டாடபடுவதில்லை, ஆனால், ஆண்டு தோறும் அக்டோபர் 1 ஆம் தேதி, ஜப்பான் அரசு சாா்பில் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விழாகள் நடத்தப்படுகிறது. 


அந்த நாளில் சுமாா் 100 வயதை தாண்டி வாழும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் வெள்ளி சாகே கோப்பை வழங்கும் நிகழ்வும் நடக்கும் மற்றும்  இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஜப்பான் அரசு சாா்பில் பரிசுகளும் பாராட்டும் வழங்கி கௌரவிக்கப்படுவாா்கள்.