மோடியின் குற்றச்சாட்டு - காங்கிரசால் மறைந்த ''பெரும் பண்பாட்டுச் செழிப்பு''
மோடியின் குற்றச்சாட்டு - காங்கிரசால் மறைந்த ''பெரும் பண்பாட்டுச் செழிப்பு''
புது டெல்லி;
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நிகழ்த்திய உரையில் “வந்தே மாதரம்” குறித்து பேசும்போது இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரியத்தையும் தேசிய அடையாளத்தையும் வலியுறுத்தினார். இந்திய நாகரிகத்தின் “பெரும் பண்பாட்டுச் செழிப்பு கடந்த கால அரசுகளால் முறையாக உலகிற்கு எடுத்துக் காட்டப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
உரையின் போது, மோடி மறைமுகமாக காங்கிரஸை விமர்சித்தார். “சில அரசுகள் சர்வதேச அழுத்தங்களுக்குப் பிந்தி தேசிய நலன்களை விட்டுக்கொடுத்தன” என அவர் குற்றம் சாட்டினார். இதை எதிர்க்கட்சிகள் தேர்தல் நோக்கத்திற்கான அரசியல் குற்றச்சாட்டாகவே பார்க்கின்றன.
வந்தே மாதரம் தொடர்பான விவாதங்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன. தேசியத்துவம், வரலாறு, மற்றும் அரசியல் நோக்கம் குறித்து புதிய விவாதங்களுக்கு இது வழிவகுக்கும் என மதிப்பீடு செய்யப்படுகிறது.
- இலக்கியா சக்திவேல்
