நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு தகவல் பரவி வருகிறது.
எனவே,10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.