Goa Fire Accident Case | கோவா தீவிபத்தில் 25 பேர் பலி - இணை உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Goa Fire Accident Case | கோவா தீவிபத்தில் 25 பேர் பலி - இணை உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
கோவாவின் Birch by Romeo Lane நைட் கிளப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இணை உரிமையாளர் அஜய் குப்தாவை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் இன்று சன்லைட் காலனி குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார்.
போலீஸ் தகவலின்படி, நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள், உரிய அனுமதிப் பத்திரங்கள், தீ பாதுகாப்பு உபகரணங்களின் இல்லாமை உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த விபத்துக்கான காரணங்களாக உள்ளனவா என்பதை ஆராய்ச்சி செய்ய விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்து வழக்கில் அஜய் குப்தா ஆறாவது நபராக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர்மீது Look-Out Circular (LOC) பிறப்பிக்கப்பட்டிருந்ததால், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவும், தொடர்ந்து விசாரணை நடத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அஜய் குப்தாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இலக்கியா சக்திவேல்
