கேரளா உள்ளாட்சி தேர்தல்; LDF–UDF இடையே கடும் போட்டி

காங்கிரஸ் முன்னிலை

Dec 13, 2025 - 11:49
 3
கேரளா உள்ளாட்சி தேர்தல்; LDF–UDF இடையே கடும் போட்டி

கேரளா உள்ளாட்சி தேர்தல்; LDF–UDF இடையே கடும் போட்டி

காலை 9 மணி நேர நிலவரப்படி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் முன்னிலை

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தற்போது, வெளியாகியுள்ள நிலவரப்படி, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே நெருக்கடியான போட்டி நிலவுகிறது.

வெளியான முடிவுகளின்படி, கிராமப்புற பஞ்சாயத்துகளில் LDF முன்னிலை வகிக்கிறது. நகர்ப்புறங்கள் மற்றும் மாநகராட்சிகளில் UDF பல இடங்களில் முன்னணியில் உள்ளது.

முக்கிய நகரங்களில் சில பகுதிகளில் BJP தலைமையிலான NDA-ம் கணிசமான வாக்குகளை பெற்று மூன்றாவது சக்தியாக உருவெடுத்து வருகிறது.

முக்கிய மாநகராட்சிகளான திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மும்முனைப்போட்டி நிலவி வருவதால், இதுவரை எந்த ஒரு முன்னணியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறவில்லை.

மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய இந்த தேர்தல், 2026 கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றும் வரும் சூழலில் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் நிலவரம் மாறக்கூடும் என தேர்தல் வட்டாரங்கள் தகவல். 

காலை 9 மணி நேர நிலவரப்படி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.