கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்!

மனமுருகி பிரார்த்தனை

Dec 25, 2025 - 12:23
 2
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் விழா என்பது இன்று உலகத்தில் உள்ள பெரும்பான்மையான கிருத்துவர்களால்,   ஜாதி ,மதம் பாராமல் உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழாவாகும், இது ஆண்டுதோறும் டிசம்பர் 25   அன்று உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான  மக்களிடையே மத மற்றும் கலாச்சார விழாவாக  கொண்டாப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள் கர்ப்பவதியாக இருந்தபோது, பெத்லகேமுக்குச் சென்றார், அங்கு அவர் இயேசுவைப் பெற்றெடுத்தார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூத இனத்தில் பிறந்தார்.

தன்னை தானே வருத்திக்கொண்டு உலக மக்கள் ஜீவிக்க வந்தவர் ஏசுபிரான்  அவர் 12 வயதில்  மக்களின்  நோய்களை குணமாக்குதல்  போன்ற பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார்.

இதனால் யூதத் தலைவர்களால் கைது செய்யப்பட்டு, ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டார்.

அவர், அவதரித்த நாள் மட்டுமல்லாது, அவர் மறித்து உயிர்த்தெழுந்த நாட்களிலும் வெளிநாடுகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் கிறிஸ்து பிறப்பான இன்று வேளாங்கண்ணி, கன்னியாகுமரி சென்னை சாந்தோம், பெசண்ட் நகர், செயிண்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு இரவு 12 மணி வரை சிறப்பு ஆராதனை கூட்டங்களும் நடைபெற்றது.

இதில் பல்லாயிரகணக்கான கிறிஸ்துவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்து மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.