அதிமுக தான் எதிர்கட்சி - உதயநிதி ஓபன் டாக்!
நாங்கள் தயாராக இருக்கிறோம்
அதிமுக தான் எதிர்கட்சி - உதயநிதி ஓபன் டாக்!
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான பலமான கட்சியே இல்லை. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அதிமுகவைத்தான் முதன்மை எதிர்க்கட்சியாகப் பார்க்கிறோம். அதிமுக இப்போது பலவீனமாக இருந்தாலும், திமுகவின் எதிர்க்கட்சியாக அதிமுகவை மட்டுமே கருதுகிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று அறிவித்திருக்கும் நிலையில், உதயநிதி அதை நேரடியாகக் குறிப்பிடாமல் அதிமுகவை மட்டும் எதிர்க்கட்சியாகக் குறிப்பிட்டது கவனம் பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய உதயநிதி, திமுக கூட்டணி அனைத்து கட்சிகளின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு செயல்படும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனநாயகத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்.
அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செல்லும் பக்குவம் அவருக்கு உண்டு என்று பாராட்டினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாஜக மற்றும் அதன் B டீமை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என உறுதியளித்துள்ளார்.
திமுகவுக்கு வலுவான எதிரியே இல்லை என்ற அவரது கருத்து, தமிழக அரசியலில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. திமுகவின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் அதே நேரம், எதிர்க்கட்சிகளுக்கு சவாலாகவும் அமைந்துள்ளது.
2026 தேர்தல் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
