3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட சடலம்! நெல்லை வந்த செல்வப்பெருந்தகை!

May 4, 2024 - 20:11
 8
3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட சடலம்! நெல்லை வந்த செல்வப்பெருந்தகை!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் KPK ஜெயக்குமார் காணவில்லை என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தற்போது ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜெயகுமார் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகவும் முதற் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் KPK ஜெயக்குமார். இவர் நேற்று முன்பு வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலறும் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதன் பின்னர் 28 வயதான அவருடைய மகன் கருணையா ஜிப்ரின் இது குறித்து உவரி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் போசீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வன்ந்துள்ளனர். இந்த  நிலையில் அவர் கடந்த 2ம் தேதி காணாமல் போனதை அடுத்து இன்று அவருடைய வீட்டின் பின்புரம் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், இவர் கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரண வாக்குமூலம் என புகார் மனு ஒன்றை அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதில் தனக்கு சமீப காலமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அரசியலில் இதெல்லாம் சகஜம் என நினைத்து கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது 3 தடவை தனது வீட்டு அருகே இரவில் ஆள் நடமாட்டம் சந்தேகத்திற்கு இடமாக வந்து செல்வதாகவும். இதனால் தனக்கு ஏதாவது நேர்ந்தால் கீழ்கண்ட நபர்களின் சதியாக இருக்கும் என சந்தேகப்படுபவர்களின் பெயர்களையும் அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் தனது கைப்பட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காளிப்பாளுக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதே சமயம் ஜயக்குமாரின் இந்த கடிதம் இதுவரை மாவட்ட காவல் கண்காணிப்பாள்ருக்கு புகாராக அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும், ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று நெல்லை எஸ்பி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் நெல்லை வந்துள்ளார். கேபி ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தது நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.