50 வருடமாக சாலை இல்லை!

Jul 2, 2024 - 19:05
 5
50 வருடமாக சாலை இல்லை!
50 வருடமாக சாலை இல்லை!

புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் தாலுகா புண்ணிய வயல் ஊராட்சியில் உள்ள பன்னியூர் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் வாழுகின்ற பகுதிக்கு செல்லுகின்ற சுமார் 400 மீட்டர்சாலை சேரும் சகதியும் ஆக, பள்ளம் மேடாக, மழை காலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதை பயன்படுத்துகின்ற குடும்பங்கள், மாணவர்கள் .மற்றும் கர்ப்பிணி பெண்கள் தினந்தோறும் அல்லல் பட்டு அவதிப்பட்டுசாலையை கடக்கின்ற  சூழல் நிலவுகிறது, அந்த வழியே பள்ளி செல்லும் மாணவர்கள் வீடு திரும்பும் போதுசேரும் சகதியோடு வந்து செல்கின்ற அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது, சுமார் 400 மீட்டர் நீளமுள்ள அந்த சாலையை எந்த ஒரு அதிகாரியும் அரசு அலுவலர்களும் திரும்பி பார்ப்பதில்லை என்றும், எனவே உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் பாதையை ஆய்வு செய்து தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது பன்னியூர் கிராமத்திற்கு சாலைபொதுமக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பு சரியாகுமா கிடைக்குமா?