ஆம் ஆத்மிக்கு கண்டனம்!

May 15, 2024 - 17:47
Sep 9, 2024 - 23:56
 9
ஆம் ஆத்மிக்கு கண்டனம்!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி சுவாதி மாலிவால் சமீபத்தில் அவரது வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அவரை கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபப் குமார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசாருக்கு தெரிவித்திருந்த சுவாதி மாலிவால் முறைப்படி புகார் அளிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் மவுனம் காத்து வந்த ஆம் ஆத்மி கட்சி சுவாதி மாலிமால் தாக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளது. ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் கூறிய போது, கெஜ்ரிவாலை சந்திக்க காத்திருந்த சுவாதி மாலிவாலிடம் பிபப் குமார் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவும் இதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த விவகாரம் முதல்வருக்கு சென்ற போது பிபவ் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும், சுவாதி மாலிவால் அமைதியாக இருக்கிறார். ஒட்டுமொத்த விவகாரத்தையும் மூடி மறைக்க நினைக்கிறார் என டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்சாதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.