கன மழைக்கு வாய்ப்பு

May 16, 2024 - 01:19
Sep 10, 2024 - 00:18
 15
கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மே.17 முதல் 19 வரை மேற்குத் தொடர்ச்சி மலை, தென் மாவட்டங்கள், டெல்டா வட உள் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், மே. 18ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.