ஐபிஎல் விவகாரத்தில் தமன்னாவுக்கு சம்மன்
மஹாதேவ் ஆன்லைன் கேமிங் மற்றும் வெட்டிங் செயலியின் துணை செயலியான ஃபேர் ப்ளே செயலியில் 2023ம் ஆண்டு சட்டவிரொதமாக ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இதனால் ஐபிஎல் உரிமையை பெற்றிருந்த நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன. வியாகாம் 18 நிறுவனம் மட்டும் 100 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
இதன் காரணமாக மஹாராஸ்டிரா சைபர் கிரைம் போலீசில் அந்நிறுவனம் புகார் அளித்தது. சட்டவிரோதமாக அனுமதியின்றி ஃபேர்ப்ளே ஆப்கள் ஒளிப்பரப்புவது தெரிந்தும் பிரபல நடிகர், நடிகைகள் அதை விளம்படுத்தியிருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சஞ்சய் தத், நடிகை தமன்னா, ஜாக்லின் ஃபெர்னாண்டஸ் உட்பட பலர் மீது செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இபோது தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். 29ம் தேதிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென கூறியுள்ளனர். ஏற்கனவே ராப் சிங்கர் பாஷாவிடம் விசாரணை நடத்தினர். ஒருபக்கம் 2024க்கான ஐபிஎல் போட்டி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் 2023ம் ஆண்டுக்கான வழக்கும் சூடு பிடித்துள்ளது.