மேற்கு வங்க அரசின் நடவடிக்கை செல்லாது! பாவம் செய்த எதிர்கட்சிகள் - மோடி

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருக்கும் பிரதமர் மோடி, இட ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் சாசதனத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மத ரீதியில் இட ஒதுக்கீடு வழங்கி மிகப்பெரிய பாவம் செய்துள்ளனர். முதலில் ஆந்திராவில் காங்கிரஸ் இந்த தவறை செய்தது. முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஓபிசி மக்களை வஞ்சித்தது. ஆனால் ஆந்திர அரசின் அந்த செயலை, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. அரசியல் சாசனத்திற்கு எதிரான செயலை நீதிமன்றம் ஒரு போதும் ஏற்காது. பின்புற வாசல் வழியாக இவர்கள் தங்கள் எண்ணத்தை பூர்த்தி செய்ய நினைத்தனர். கர்நாடகத்திலும் மேற்கு வங்கத்திலும் இது நடந்தது. அதாவது, ஒரே நேரத்தில் முஸ்லீம்கள் அனைவரும் ஓபிசிகள் என மம்தா பேனர்ஜி அறிவித்தார். அவர்களுக்கு ஓபிசி கோட்டா கிடைத்தது. இதன் மூலம் ஏற்கனவே அந்த கோட்டாவின் கீழ் சலுகை பெற்றவர்களின் உரிமை பாதித்தது. இதெல்லாம் தவறு என நாங்கள் எப்போதோ கூறினோம். ஆனால் எதிர்கட்சிகள் தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு எதிராகவே செயல்பட்டனர். இட ஒதுக்கீடு விவகாரத்தில் மேற்கு வங்க அரசின் நடவடிக்கை செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனாலும், எதிர்கட்சிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். ஓட்டு வங்கி அரசியலுக்காக நீதிமன்ற தீர்ப்பையும் ஏற்க மறுத்து, நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர் என மோடி பேட்டியில் கூறியுள்ளார்.