கூலி படத்தில் ரஜினியுடன் இணையும் சத்யராஜ் | Rajinikanth-Sathyaraj reunite for 'Coolie'

38 வருடத்திற்கு பிறகு இணைந்து நடிக்கும் இரண்டு ஹீரோக்கள்!

Jun 1, 2024 - 00:11
Sep 9, 2024 - 23:30
 16
கூலி படத்தில் ரஜினியுடன் இணையும் சத்யராஜ் | Rajinikanth-Sathyaraj reunite for 'Coolie'

கூலி படத்தில் ரஜினியுடன் இணையும் சத்யராஜ் | Rajinikanth-Sathyaraj reunite for 'Coolie'

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தான் கூலி. இந்த படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் ரிலீசானலும், படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த எந்த தகவலும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.  இதற்கிடையில் சத்தியராஜ் கூலி படத்தில் நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் சில செய்திகளும் பரவி வந்தது.

ரஜினியுடன் இணையும் சத்யராஜ்!

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சத்யராஜ் கூலி படத்தில் நடிக்கப் போவதாக உறுதி செய்து இருக்கிறார். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் 38 வருடத்திற்கு பிறகு இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு "மிஸ்டர் பாரத்" என்ற படத்தில் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடித்திருப்பார். அதுவும் அந்த படத்தில் இடம் பெற்ற "என்னம்மா கண்ணு சௌக்கியமா" என்ற பாடல் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த ஒரு கூட்டணி என்றே இவர்களை சொல்லலாம். 

சிவாஜி படத்தில் நடிக்க மறுத்த சத்யராஜ்!

இதற்கு முன்பே சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்காக சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.  ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு அவர் மறுத்துவிட்டாராம். ஆனால் தற்போது கூலி படத்தில் நடிப்பதற்கு அவர் ஓகே சொல்லி இருப்பதனால், அந்த படத்தில் சத்யராஜின் கதாபாத்திரம் வேற லெவலில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.