கார்த்தி நடிக்கும் "வா வாத்தியார்"!

Jun 1, 2024 - 22:59
Sep 9, 2024 - 22:46
 11
கார்த்தி நடிக்கும் "வா வாத்தியார்"!

கார்த்தி நடிக்கும் "வா வாத்தியார்"!

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி அவருடைய 26வது படத்தில் நடிக்கிறார்.  இப்படத்திற்கு "வா வாத்தியார்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் சத்யராஜ், ராஜ்கிரண் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில் கார்த்தி போலீஸ்  வேடத்திலும், அவரைச் சுற்றி எம்.ஜி.ஆர் கெட்டப் உருவப்படங்களும் உள்ளன.  

எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கும் கார்த்தி!

மறைந்த எம்.ஜி.ஆரை ரசிகர்கள் வாத்தியார் என அழைப்பது வழக்கம். எனவே இந்த படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பார்க்கும்போது, இந்த படத்தில் கார்த்தி எம். ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.