யாருக்கு எந்த இலாக்காக்கள்?

Jun 11, 2024 - 02:05
Sep 9, 2024 - 23:30
 11
யாருக்கு எந்த இலாக்காக்கள்?

பிரதமர் மோடி தலைமையில் முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியிருக்கிறது . மோடி பதவியேற்று சுமார் 21 மணி நேரமாகியும் இலாகாக்கள் அறிவிக்கப்படாததால், பதவியேற்றுள்ள அமைச்சர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.எனவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொன்றாக அற்விக்கப்பட்டும் வருகிறது. அடுத்தடுத்து எந்த அமைச்சருக்கு எந்த இலாக்காக்கள் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான 3வது அமைச்சரவையின் முதல் கூட்டம் என்பதால் முக்கிய முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.. மேலும், இந்த கூட்டத்தின் முடிவில் என்னென்ன விவாதிக்கப்பட்டது? என்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து அறிவிக்கப்பட உள்ளது.