கள்ளச்சாராயம் விற்ற ஒருவர் கைது! 60 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்…

Jun 22, 2024 - 19:21
Sep 9, 2024 - 23:13
 12
கள்ளச்சாராயம் விற்ற ஒருவர் கைது! 60 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 90-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்தே உள்ளிட்ட மதுவிலக்கு போலீசார் கலால் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர். 

மாவட்டத்தில் உள்ள பயன்பாடு இல்லாத அரசு கட்டிடங்கள் கைவிடப்பட்ட கட்டிடங்கள் இயங்குவாத குவாரிகள் ஆகியவற்றில் கள்ளத்தனமாக சாராய விற்பனையோ மது விற்பனை நடைபெறுவதை காவல்துறையினர் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார் மேலும் பொதுமக்கள் கலாச்சாராயம் மற்றும் மது விற்பனை தொடர்பாக புகார் இருந்தால் 8531085350 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியை தெரிவித்து இருந்தார்.

 இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்துதா பாண்டே உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் நேற்று உடையாலி ப்பட்டி பகுதியில் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஆதனக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 60 லிட்டர் கலாச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்ததோடு வீராச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள காட்டுப் பகுதியில் சாராய ஊரல் போட்டிருப்பதும் தெரியவந்தது.

 இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊரல்  குடங்களை கைப்பற்றி அதனை கீழே ஊற்றி அழித்தனர்

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து சாராய தேடுதல் ரைடு நடத்தப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.