ஒரு நாள் தலைமையாசிரியராக பொறுப்பேற்ற மாணவி!
மாணவ மாணவிகள் தலைமைப் பண்புகளை பள்ளிப் பருவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராக அந்த பள்ளி ஆசிரியர்களால் நியமிக்கப்பட்டு இன்று ஒரு நாள் தலைமை ஆசிரியராக அவர் பணிபுரிந்து வரும் சம்பவம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.
மாணவ மாணவிகள் பள்ளிப்பருவத்தில் இருந்து தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் தலைமை பண்பில் உள்ள குறைபாடுகள் எவ்வாறு களைய வேண்டும் தங்களுக்கு அந்தப் பணியில் உள்ள சிரமங்கள் நன்மைகள் ஆகியவற்றை அறிந்து அதற்கு ஏற்றார் போல தங்களுடைய தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசும் ஆசிரிய சமுதாயத்தினரும் சரி பல்வேறு வகையான பாடங்கள் மற்றும் போதனைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.
இதற்கு ஒரு படி மேலே போய் முன்னுதாரணமாக பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரையே ஒரு நாள் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுத்து அவருக்கு பணி நியமன ஆணையும் அளித்து அவரை தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து ஆசிரியர் சமுதாயத்தினர் அழகு பார்த்த சம்பவம் அனைவரையும் நிகழ்ச்சி அடைய செய்தது .