ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்!

Jun 28, 2024 - 22:12
Sep 9, 2024 - 22:54
 9
ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்!

நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சட்டசபையில் இன்று முதல்வர் .ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

நீட் தேர்வு குறித்த பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, நாள்தோறும் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதனையடுத்து தற்போது பல மாநில அரசுகளும், கல்வி அலுவலர்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் 3வது முறையாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதவை ஆளுநர் ரவி அனுப்பியிருந்தது நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துகளுக்கு பிறகு நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரிய தனித் தீர்மானம் தற்போது அவையில் நிறைவேற்றப்பட்டது.