ஸ்டாலினின் ஆகச்சிறந்த நகைச்சுவை!

Jun 29, 2024 - 20:10
Sep 9, 2024 - 22:44
 12
ஸ்டாலினின் ஆகச்சிறந்த நகைச்சுவை!

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் தண்டனைகள் கடுமையாக இல்லை என கூறி திருத்த மசோதா கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அவர், கடந்த ஆண்டு 23 பேர் பலியாக காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரிக்கு நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் 65பேர் பலியான பின்பும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமியை பதவி நீக்கம் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை போதைப் பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்கிற்கு திமுகவில் உயர் பதவி கொடுத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாத்திக்கும் வரை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.