எலிக்காக சிலை வைத்த Russia

May 3, 2024 - 00:58
 29
எலிக்காக சிலை  வைத்த  Russia

எலிக்காக சிலை வைத்த Russia 

உலகம் முழுவதும், பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நோய்களுக்கு மருந்து கண்டறிவது, உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளுவது என என்னற்ற ஆராய்ச்சி சாா்ந்த ஆய்வு கூடங்களில் எலிகள் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது . ஆராய்ச்சிகளில் ஈடுபடும்  விஞ்ஞானிகளால் கண்டறியப்படும் மருந்துகள், எப்படி செயல்படுகிறது என்ற சோதனையை எலிகளுக்கு செலுத்தப்பட்டு மருத்தின் செயல் திறனைக் கண்டறிந்து, மனித உயிர்களுக்கு ஏற்றால்போல், எலிகளின் மரபணு இருப்பதால், உயிரியல் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எலிகள் பக்கபலமாக அமைகிறது.

பல்லாயிரம் கணக்கில் ஆய்வுக் கூடங்களில் உயிரிழக்கும் எலிகளை நினைவுக்கூர்ந்து  கவுரவிக்கும் வகையில், ரஷ்ய நாட்டில் எலிகளின் தியகத்தை போற்றும் வகையில் எலிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள, சைட்டாலஜி மற்றும் மரபியல் கல்வி நிறுவனத்தில்தான் இந்த எலி சிலை வைக்கப்பட்டுள்ளது. கண்களில் கண்ணாடி மாட்டிக்கொண்டும், சால்வை போா்த்திக் கொண்டும்,   ஊசியுடன் கைகளில் டிஎன்ஏ-வை பிடித்து இருக்கும் வன்னம் வடிவமைக்கப்பட்ட இநத எலி சிலையின் ரஷ்ய மக்களிடம் பெறும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், இந்த எலியின் சிலை உலகளவில் கவனம் பெற்றுள்ளது