சவுக்கு சங்கருக்கு ஷாக் அளித்த நீதிமன்றம்!

May 10, 2024 - 00:24
 8
சவுக்கு சங்கருக்கு ஷாக் அளித்த நீதிமன்றம்!
சவுக்கு சங்கருக்கு ஷாக் அளித்த நீதிமன்றம்!

காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவல் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர் கைது செய்யபட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமின் வழங்கவேண்டும் என நேர்காணலை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் நேர்காணல் அளிக்கவருபவர்களை அவதூறு கருத்துகளை தெரிவிக்க தூண்ட கூடிய நேர்காணல் எடுப்பவர்களை முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனுவுக்கு காவல்துறையினர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.