சிம்ரன், மீனா, அஜித் கூட்டணியில் புதிய படம்!

Apr 30, 2024 - 01:53
 5
சிம்ரன், மீனா, அஜித் கூட்டணியில் புதிய படம்!

நடிகர் அஜித் குமார் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில இணஞ்சு உருவாகிட்டு வர படம் தான் விடாமுயற்சி. இந்த படத்துக்கான படப்பிடிப்பு தீவிரமா நடந்துட்டு வருது. இந்நிலையில, விடாமுயற்சிய அடுத்து நடிகர் அஜித், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்துல மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்குற புதிய படத்துலயும் இணஞ்சுருக்காரு.

இந்த படத்துக்கு ‘Good bad agly ந்னு பெயரிட்டுருக்காங்க. இந்த படத்துல அஜித் ஹீரோவாவும், பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீலீலா ஹீரோயின்னாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுருக்கதாவும்,  இதுக்கான படப்பிடிப்பு மே முதல் வாரத்துல ஹைதராபாத்துல துவங்க இருக்கதாவும் சொல்லப்படுது.

இந்த நிலையில, Good bad agly படத்துல நடிகைகள் சிம்ரன் , மீனா இணைஞ்சிருக்கதாவும் தகவல் வெளியாகி இருக்கு. அஜித் மற்றும் சிம்ரன் இணைஞ்சு நடிச்ச வாலி படம் பயங்கர ஹிட் கொடுத்தத அடுத்து இந்த படத்துல சிம்ரனுக்கான ரோல் என்னவா இருக்கும் அப்டின்னும் ரசிகர்கள் மத்தியில எதிர்பார்ப்ப ஏற்படுத்தியிருக்கு.  அதே சமயம் மீனாவுக்கும் இதுல முக்கிய ரோல் இருக்கும் அப்டின்னும் சொல்லப்படுது.